டிசம்பர் காலாண்டில் 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை 6.7% ஆக உயர்த்த மத்திய அரசு எடுத்த முடிவு குறித்த சமீபத்திய செய்திகளை, அக்டோபர்-டிசம்பர் 2023 காலாண்டிற்கான திருத்தப்பட்ட சிறுசேமிப்பு திட்ட விகிதங்களை அரசாங்கம் செப்டம்பர் 29 வெள்ளியன்று அறிவித்தது. RD அக்கவுண்ட் வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி, புதிய அறிவிப்பு இன்று வெளியிட்டுள்ளன. RDகளுக்கான வட்டி விகிதம் உயர்த்தப்படுவது இதுவே முதல் முறை, அக்டோபர் 1, 2023 முதல் ஐந்தாண்டு தொடர் வைப்புத்தொகையின் ( RDs ) வட்டி விகிதத்தை 6.5% இலிருந்து 6.7% ஆக இந்திய மத்திய அரசு உயர்த்தியுள்ளது. 5 ஆண்டு தொடர் வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 6.5% இலிருந்து 6.7% ஆக 0.2% அதிகரிக்கப்பட்டது, அதே சமயம் மற்ற அனைத்து திட்டங்களுக்கான விகிதங்களும் முந்தைய காலாண்டின் அதே மட்டத்தில் தக்கவைக்கப்பட்டது, சேமிப்பு வைப்புத்தொகையின் வட்டி விகிதம் 4%, ஒரு வருட கால வைப்புத்தொகைக்கு 6.9%, இரண்டு ஆண்டு மற்றும் மூன்று ஆண்டு கால வைப்புகளுக்கு 7% மற்றும் ஐந்தாண்டு கால வைப்புத்தொகைக்கு 7.5%, மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் வட்டி விகிதம் 8.2%, ...